லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இன்று பிரதமர் மோடி இன்று சேலத்தில் பாஜக சார்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பாஜகவினர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சரத்குமார் வந்திருந்தார். அவரையடுத்து நடிகை குஷ்பு வந்திருந்தார். ரத்குமாருக்கு இரண்டு சேர்கள் தாண்டி குஷ்பு அமர்ந்த பின்தான் திடீரென சரத்குமாரை பார்த்தார். பிறகு பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். இருவரும் நாட்டாமை உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.