பிரேசிலின் ஒலிண்டா நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நடந்த துயரமான சம்பவம் அங்குள்ளவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த மாதம் 1ஆம் தேதி, ரொனால்ட் மாண்டினீக்ரோ (55) என்ற நபர் ஜிம்மில் பெஞ்ச் பிரஸ் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தவறுதலாக பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக மார்பின் மீது பட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

 

உடனடி வலியால் அதிர்ச்சியடைந்த மாண்டினீக்ரோ, பார் பெல்லை பக்கவாட்டில் தள்ளி எழுந்து நின்றபோதும், சில நொடிகளில் அவர் திடீரென நிலைகுலைந்து கீழே சரிந்தார். இதை பார்த்த ஜிம் ஊழியர்கள் விரைந்து சென்று முதலுதவி அளித்ததுடன், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் மாண்டினீக்ரோ உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான ஜிம் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ தற்போது வெளியாகி பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.