
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. தற்போது ஆடு ஒன்று தன்னை சீண்டிய நபரை புரட்டி எடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆடு ஒன்றுடன் மல்லு கட்டிய நபர் இறுதியில் அனுபவித்த கொடுமையை இந்த வீடியோவில் காண முடியும். சில சமயம் காரணம் இல்லாமல் தங்களை தொந்தரவு செய்யும் மனிதர்களுக்கு விலங்குகள் சரியான பதிலடி கொடுப்பதை நாம் பலரும் பார்த்திருப்போம். அதன்படி ஒரு நபர் ஆட்டை வலுக்கட்டாயமாக தொந்தரவு செய்துள்ளார். அதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அந்த ஆடு அந்த நபரை புரட்டி எடுத்து பாடம் புகட்டி உள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க