இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால், ‘உல்லு’ மற்றும் ‘காந்தி பாத்’புகழ் நடிகை தானியா சாட்டர்ஜிக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியதாக எழுந்துள்ள சர்ச்சை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தானியா வெளியிட்டுள்ள வீடியோவில், சஹால் தனது புகைப்படத்தைப் பார்த்து “கியூட்” என்று மெசேஜ் அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
கேமரா முன்பாக தனது செல்போனைத் திறந்து அந்த மெசேஜையும் அவர் காட்டியுள்ளார். சஹால் தனது மனைவி தனஸ்ரீயை விவாகரத்து செய்த பிறகு அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சஹாலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
<a href=”http://
Ullu actress Taniyaa shared her DMs in which Yuzvendra Chahal had called her “cute.” This Yuzvendra Chahal is so cheap and shameless pic.twitter.com/H53pNJeiUD
— Amar💫 (@KUNGFU_PANDYA_0) April 12, 2026
“>
“இது மிகவும் மட்டமான செயல்” என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து சஹால் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நடிகை தானியாவோ, “பலர் என்னை கியூட் என்று சொல்வார்கள், இது சாதாரணமான ஒன்றுதான்” என்று கூலாகப் பதிலளித்துள்ளார்.
