
புதுச்சேரி கூடப்பாக்கம் புதிய சேர்ந்தவர் காஞ்சனா. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் தனது அந்தரங்க புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக தனக்கும் தனது உறவினர்களுக்கும் அனுப்பியதாக குற்றம் சாட்டினார். மேலும் தான் சொல்லும் இடத்திற்கு தனிமையில் வர வேண்டும் என மிரட்டுவதாக காஞ்சனா புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஐடி எந்த ஊரில் இருந்து இயங்குகிறது என்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது காஞ்சனா பாண்டியன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். பாண்டியனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதனை அறிந்த காஞ்சனா தனது இரண்டாவது கணவரை விட்டு பிரிந்தார். தற்போது பாண்டியன் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு காஞ்சனாவை வற்புறுத்தி வருகிறார். அதற்கு காஞ்சனா மறுப்பு தெரிவித்ததால் அவருடன் சேர்ந்து எடுத்த அந்தரங்க புகைப்படங்கள் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.