பெங்களூரில் உள்ள டீக்கடை ஒன்றில் 18 வயதான வாலிபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அந்த டீக்கடைக்கு தேநீர் அருந்த வந்த சில திருநங்கைகளுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுயுள்ளது. அந்த 5 திருநங்கைகள், வாலிபரிடம் அதிக வருமானம் பெறுவதற்கான வேலை எங்களிடம் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த திருநங்கைகள் விடாமல் அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து அவரை தெருவில் பிச்சை எடுக்க வைத்துள்ளனர். பின்பு கடந்த 12ஆம் தேதி 5 திருநங்கைகள் அந்த வாலிபர் வசிக்கும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு அவரிடம் திருநங்கைகள் ஒரு ஆண் பிச்சைக்காரராக நீ ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பாதிக்கும் போது பெண்ணாக இருந்தால் எவ்வளவு சம்பாதிப்பாய் என்று கூறியுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த வாலிபரை வலுக்கட்டாயமாக பிடித்து சில ஊசிகளை செலுத்தியுள்ளனர். பின் மயக்கம் அடைந்த அந்த வாலிபரின் ஆணுறுப்பை அறுத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த வாலிபர் தனது ஆணுறுப்பு இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் ஆகஸ்ட் 3-ம் தேதி அந்த வாலிபரை பாலியல் தொழில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பித்து வந்த வாலிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த 5 திருநங்கைகளையும் கைது செய்தனர்.