மும்பையில் ஒரு வங்கி ஊழியர் என்று கூறப்படும் பெண்ணின் ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவில், அனுராதா வர்மா என்ற பெண் ஒரு ராணுவ வீரருக்கு கடன் திருப்பி செலுத்துவது தொடர்பாக பேசுகிறார். கடனின் வட்டி விகிதம் குறித்து வீரர் கேள்வி எழுப்பியதற்கு, அவர் கோபமடைந்து, அவரை மிகவும் மோசமாக பேசி, அவமதிக்கும் வகையில் பதிலளிக்கிறார். மேலும், ராணுவத்தையும், வீர மரணம் அடைந்தவர்களையும் இழிவாகப் பேசுகிறார். இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் பரவியதால், மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
எச்.டி.எஃப்.சி வங்கி இது தொடர்பாக விளக்கம் அளித்து, ஆடியோவில் உள்ள பெண் தங்கள் வங்கியின் ஊழியர் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. வங்கியின் செய்தித் தொடர்பாளர், இந்த ஆடியோவில் காணப்படும் நடத்தை எச்.டி.எஃப்.சி வங்கியின் மதிப்புகளுக்கு எதிரானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார். ஆடியோவில், அந்தப் பெண் ராணுவ வீரரை “கிராமத்தான்”, “படிக்காதவன்” என்று அவமதித்து, “நீங்கள் படித்தவராக இருந்தால் நல்ல நிறுவனத்தில் வேலை செய்திருப்பீர்கள், எல்லையில் நிற்க வேண்டியதில்லை” என்று கூறுகிறார். மேலும், வீர மரணம் அடைந்தவர்கள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.
मुंबई: HDFC बैंक की कर्मचारी अनुराधा वर्मा ने सेना के जवान से गाली-बरसी की
◆ ऑडियो वायरल होने पर सोशल मीडिया पर विरोध और कार्रवाई की मांग उठी
◆ महिला ने जवान और शहीदों के लिए आपत्तिजनक शब्द कहे, गुस्से में भड़क उठीं#HDFCBank | Indian Army | #Mumbai pic.twitter.com/OEjCXPIBi6
— News24 (@news24tvchannel) September 18, 2025
ராணுவ வீரர் அவரைப் பணிவாகப் பேசுமாறு கேட்டபோதும், அந்தப் பெண் தொடர்ந்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி, “நான் ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவள், 12 ஆண்டுகளாக சி.ஆர்.பி.எஃப்-ல் வியாபாரம் செய்கிறேன்” என்று கூறுகிறார். வீரர், “உங்கள் பேச்சைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன், உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்” என்று எச்சரிக்கையாகக் கூற, அவர் “எங்கே வேண்டுமானாலும் பதிவை அனுப்பு, உன்னால் என்ன முடியுமோ செய்” என்று திமிராக பதிலளிக்கிறார். இந்த ஆடியோவால், அனுராதா வர்மா என்ற பெண்ணின் நடத்தை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
