நெதன்யாகுவை ‘பைத்தியக்காரன்’ என போனில் கதறவிட்ட டிரம்ப்.. ‘நான் மட்டும் இல்லனா நீ ஜெயில்ல இருந்திருப்ப’ என படுபயங்கர ஆவேசம்..

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களால் அமெரிக்கா – ஈரான் இடையேயான ராஜதந்திரப் பேச்சுவார்த்தை உடையப் பார்த்த விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே திங்கள்கிழமை நடந்த ரகசிய போன் காலில் செம டோஸ் விழுந்திருக்கும் பகீர் தகவல் உலகையே அதிர வைத்துள்ளது!

“நீ ஒரு பைத்தியக்காரன், நான் மட்டும் உன்னைக் காப்பாற்றவில்லை என்றால் இந்நேரம் நீ சிறையில் இருந்திருப்பாய்.. உன்னால் இப்போது எல்லாரும் இஸ்ரேலையே வெறுக்கிறார்கள்” என்று டிரம்ப் செம கோபமாக கத்தி போனில் பேசியதாக  அமெரிக்க அதிகாரி ஒருவர் ஆக்சியோஸ் (Axios) செய்தி நிறுவனத்திடம் போட்டு உடைத்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த  ராணுவ நடவடிக்கைகளால் உலகளவில் அதன் நற்பெயர் கெடுவதாக டிரம்ப் எச்சரித்த நிலையில், நிலைமை சமாளிக்கப்படும் என நெதன்யாகு பதிலளித்துள்ளார்.

இந்த  சண்டையை மூடிமறைக்க டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில், “பிபி நெதன்யாகுவுடன் பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தினேன், பெய்ரூட் நோக்கிச் சென்ற இஸ்ரேல் படைகள் திருப்பப்பட்டுவிட்டன, ஹிஸ்புல்லாவும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது” என பாசிட்டிவாகப் பதிவிட்டு நாடகமாடினார்.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, “எங்கள் கொள்கையில் மாற்றமில்லை, ஹிஸ்புல்லா தாக்கினால் பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கும்” என்று நெதன்யாகு அதிரடியாக அறிக்கை வெளியிட்டு டிரம்பின் முகத்திலேயே கரியைப் பூசியுள்ளார்.

வாஷிங்டன் டூ ஜெருசலேம் வரை ஓப்பனாக வெடித்துள்ள இந்த ஈகோ யுத்தம், சர்வதேச அரசியல் களத்தில் இப்போ  விவாதங்களை உருவாக்கிஉள்ளது.