இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தாகம் பசி என்பது ஒன்றுதான்.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் யானை ஒன்று தோப்புக்குள் செல்லும்போது அங்கே நீர் பீச்சிடுகிறது. அந்த நீரை யானை தன் தும்பிக்கையால் அழகாக குடிக்கிறது. அப்படி அது குடிக்கும் போது இதற்கு எந்த அளவிற்கு தாகமாக இருந்தது என்பது தெரிகின்றது. இந்த காட்சியை மிகவும் அழகாக உள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.