
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் பூபதி என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார். அதே கிளையில் மணிகண்டன் என்பவர் டிக்கெட் பரிசோதராக வேலை பார்க்கிறார். இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு பூபதிக்கும் மணிகண்டனுக்கும் அரசு பணிமனையில் வைத்து வாய் தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மேலும் கத்தியாலும் குத்தி கொண்டனர். இதில் பூபதி படுகாயம் அடைந்தார். மணிகண்டன் லேசான காயமடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.