குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் 2.68 கோடி ரூபாய் வரை பயிற்சி மைய உரிமையாளர்களுக்கு தரப்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், விடை தெரியாத கேள்விகளை மாணவர்கள் தொடாமல் விட்டு விட  வேண்டும்.

அதன்பின்னர் ஆசிரியர் துஷார்பட் அவற்றை பிறகு நிரப்புவார் என்றும் பேரம் பேசப்பட்டது அம்பலமாகியுள்ளது . ஆரிஃப் வகோரா என்பவர் மூலமாக முறைகேடுகளை பரசுராம் ராய் நடத்தியதாக கோத்ரா காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.