பொதுவாகவே நாம் ஒரு வருடத்திற்கு மேலாக ஒரே டூத் பிரஷை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருப்போம். அப்படி நீண்ட நாட்களாக ஒரே டூத் பிரஷை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் டூத் பிரஷை 12 வாரங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதேசமயம் சாப்பிட்ட பிறகு பல் துலக்குவது நல்லது.

நீண்ட நாட்களாக தொடர்ந்து பயன்படுத்தும் டூத் பிரஷ் சேதமடைந்து இருக்கும். நீங்கள் பயன்படுத்த தொடங்கிய சுமார் மூன்று மாதங்களில் அவை வளைந்து விடும். வளைந்த முட்கள் பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் போகலாம். அதனால் பிரஷை அடிக்கடி மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.