இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் அதிக அளவு ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது ரயிலில் உள்ள சில விதிமுறைகளை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனைப் போலவே பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருக்கவும் புதிய விதி உள்ளது. இந்த விதியை நீங்கள் பின்பற்றாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். நீங்கள் செல்ல வேண்டிய ரயில் பகல் நேரத்தில் இருந்தால் அந்த ரயில் செல்லும் நேரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக நீங்கள் ரயில் நிலையத்தை அடையலாம். ஒருவேளை நீங்கள் செல்ல வேண்டிய ரயில் இரவில் இருந்தால் ரயில் வருவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பே நீங்கள் ரயில் நிலையத்தை அடையலாம்.

இரவு நேரங்களில் ரயில் நிலையத்தை முன்னரே அடையும் போது நீங்கள் எந்தவிதமான அபராதமும் செலுத்த வேண்டாம். கையில் வந்த பிறகு அதிகபட்சம் இரண்டு மணி நேரம் நீங்கள் ஸ்டேஷனில் தங்க முடியும். ஆனால் இரவு நேரமாக இருந்தால் 6 மணி நேரம் தங்குவதற்கு ரயில்வே அனுமதிக்கின்றது. இதனை மீறினால் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். ரயிலில் செல்பவர்கள் அதற்கான டிக்கெட்டை காட்டி பிளாட்பாரத்தில் காத்திருக்கலாம். ஒருவேளை ரயில் பயணம் செய்யாமல் உடன் வந்தவர்கள் தனியாக பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க வேண்டும். டெக்கர் பரிசோதவரிடம் அந்த டிக்கெட்டை காட்ட வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது