நாட்டில் மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 18 முதல் 59 வயது வரை உள்ள விதவைகள் மற்றும் விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட ஏழைப் பெண்களுக்கான பென்ஷன் திட்டத்தை டெல்லி அரசு தற்போது தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் தகுதியான பெண்களுக்கு மாதம்தோறும் 2500 ரூபாய் பென்ஷன் தொகையாக அரசு சார்பில் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பினால் விண்ணப்பதாரர் டெல்லியில் வசிப்பவராக இருக்க வேண்டும் எனவும் மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற பென்ஷன் திட்டங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பென்ஷன்தாரர் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும், விண்ணப்பதாரர் ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும். டெல்லியில் உள்ள ஏதாவது ஒரு வங்கியில் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இ-டிஸ்ட்ரிக்ட் போர்டலில் (டெல்லி) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதலில் https://edistrict.delhigovt.nic.in/ வெப்சைட்டில் உள்நுழையவும்.

பின்னர் சிட்டிசன் கார்னரின் கீழ் உள்ள புதிய பயனர் என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

ஆவணத்தைத் தேர்ந்தெடுக்கவும் – ஆதார் அல்லது வாக்காளர் ஐடியைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஆதார் அட்டை எண்/வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிடவும்.

கேப்ட்சாவை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.