இந்தியாவில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஓய்வு பெற்ற நபர்களின் வருங்கால தேவையை பூர்த்தி செய்வதற்காக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் மாத வருமானத்தை அஞ்சல் அலுவலகம் வழங்குகின்றது. இந்த திட்டத்தில் சேர விரும்பும் ராணுவ வீரர்கள் 50 வயதிற்கு மேல் உள்ளவராகவும், வி ஆர் எஸ் பெற்றவர்கள் 55 வயதிற்கு மேல் உள்ளவராகவும், ஓய்வு பெற்றவர்கள் 60 வயதுக்கு மேல் உள்ளவராகவும் இருப்பது அவசியம். இந்த திட்டத்தில் இணையும் நபர்கள் மாதந்தோறும் குறைந்தது ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக செலுத்தலாம்.

அதேசமயம் பயனர்கள் விரும்பினால் 30 லட்சம் ரூபாய் பணத்தை ஒரே தவணையாகவும் செலுத்த முடியும். இவ்வாறு செலுத்தும் தொகைக்கு அரசு சார்பில் 8.2% வட்டி வழங்கப்படும். ஒரு ஆண்டுக்கு 2.46 லட்சம் ரூபாய் வீதம் ஒரு மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் வட்டியாக பயணங்களில் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த வட்டி தொகை பயணச் செலுத்தும் வைப்புத் தொகையின் அளவை பொறுத்து மாறும். இந்த தொகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் கணக்கீடு செலுத்தப்படும். மேலும் இந்த வட்டி தொகை 1.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்தால் வரி விலக்கு வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.