இந்தியாவில் தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்டது. சில நேரங்களில் ஏடிஎம் மூலம் பணத்தை பெற்று பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும்போது சில நேரங்களில் ஏடிஎம் மிஷினில் இருந்து பணம் வருவதில்லை. ஆனால் உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தி வந்துவிடும். இப்படியான நேரத்தில் கையில் பணத்தை எடுக்காமல் உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டால் ஐந்து நாட்களுக்குள் அந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கி உங்களுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.

அவ்வாறு கொடுக்காவிட்டால் ஒவ்வொரு நாட்களுக்கும் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். அதற்கு முதலில் உங்களுடைய வங்கி கடைக்கு சென்று இது தொடர்பாக புகார் அளிக்கலாம். அதே சமயம் உங்களுக்கு வந்துள்ள பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி ஆகியவற்றை ஆதாரமாக பயன்படுத்தி நீங்கள் இறந்த தொகையை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.