இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் வங்கி செயல்பாடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதி உடன் சேவையை நிறுத்த உத்தரவிட்டு உள்ள நிலையில் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டதால் ரிசர்வ் வங்கி தலைமை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. Paytm payment வங்கி கணக்கு அல்லது wallet இல் கிரெடிட்டுகள் அல்லது டாப் அப்களை தடை செய்யும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு அதாவது மார்ச் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தது. இந்தச் செய்தி அனைவரையும் கதி கலங்க செய்தது.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு வாடிக்கையாளர்கள் பேடிஎம் பணம் பரிவர்த்தனை மூலமாக பணத்தை செலுத்த முடியாது. அதேசமயம் பேடிஎம் மூலமாக டெபாசிட் செய்யவும், பணம் பரிமாற்றம் செய்யவோ அல்லது டாப் அப் செய்யவும் முடியாது. எனவே பேடிஎம் வங்கியில் இருக்கும் பணத்தை அதற்குள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.