
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பி எம் ஸ்ரீ பள்ளிகளில் உள்ள அடல் புத்தாக்க ஆய்வகங்கள் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர உதவும். ஆனால் தேசிய கல்விக் கொள்கைக்கு சிக்கல் ஏற்படுவதால் தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 5 ஆயிரம் கோடி நிதி தடைபட்டுள்ளது. எனவே மாணவர்களின் கல்வியில் திமுக அரசு விளையாட வேண்டாம். கல்வி விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம். அரசியல் செய்வதற்கு வேறு விஷயங்கள் நிறைய உள்ளது.
ஆனால் கல்வியில் இளைஞர்களின் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை திமுகவும் உதயநிதி ஸ்டாலினும் நிறுத்த வேண்டும். தமிழகத்தில் சரியான முறையில் எல்லா மொழிகளுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர்களின் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா, ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா என அரசுதான் ஆராய்ந்து செயல்பட வேண்டும். மொழி ஆசிரியர்கள் எல்லா இடத்திலும் நிரப்பப்பட வேண்டும். அனைத்து மொழிகளும் கற்பிக்க வேண்டும் என எல்.முருகன் பேசியுள்ளார்.