
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்வது வரை செல்போனை பயன்படுத்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை கூட செல்போன் இல்லாமல் எதையும் செய்வதில்லை. அந்த அளவிற்கு செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இப்படி செல்போனை பயன்படுத்தினால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதாவது செல்போனுடன் மணி கணக்கில் செலவிடுவது கண்களை சோர்வடைய செய்யும். இதனால் கண்கள் வறண்டு போதல், மங்கலான பார்வை, தலைவலி மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நாள்பட்ட முதுகெலும்பு பிரச்சனைகளுடன் கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்துகிறது. மேலும் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். எனவே செல்போன் பயன்பாட்டை சற்று குறைத்துக் கொள்வது நல்லது.