இன்று (நவ. 14) குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி, பிறந்த பிறகு வளமாக வளர ஊட்டச்சத்தை உறுதி செய்தல், பள்ளி செல்லும் குழந்தைகளுக்குச் சத்தான உணவைப் பெற காலை உணவுத் திட்டம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் திட்டம், உயர்கல்விக்கு உதவ நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், மேலும், குழந்தைகளின் ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யும் வகையில் ‘தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021’ என திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.
🤰தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி,
👩🍼பிறந்ததும் வளமாக வளர #ஊட்டச்சத்தை_உறுதிசெய்,
🍛 வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும்
சத்தான உணவைப் பெறக் #காலை_உணவுத்_திட்டம்,🤝 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு #அன்புக்கரங்கள்,
🎓 உயர்கல்விக்கு உதவ… pic.twitter.com/mzzkD3NoJC
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 14, 2025
“>
“குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணை நிற்கும் அரசின் சார்பில் எனது குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்” என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
