கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மனுதாரரின் வாதத்தைக் கடுமையாக விமர்சித்து அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளது.

கூட்ட நெரிசல் போன்ற சோகச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவது அரசின் முழுமையான அதிகாரம் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், “பாதிக்கப்பட்ட குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபர் உயிரிழந்தால், அந்தக் குடும்பத்தின் வாரிசுக்கு அரசு வேலை வழங்குவதை எப்படி கேள்விக்குள்ளாக்க முடியும்? இதில் உயர் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்?” என்று நீதிபதி வினோத் சரமாரி கேள்வி எழுப்பினார்.

கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு அரசு தனது சொந்த விருப்பத்தின் பேரில் தன்னிச்சையாக வேலை வழங்க முடியாது என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு இடம்கொடுக்காத நீதிபதி, “நீங்கள் யார்? இதில் அரசியலைக் கொண்டுவராதீர்கள்” என்று திட்டவட்டமாக எச்சரித்தார்.

மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படுவது மற்றும் வாழ்வாதாரத்திற்காக அரசாங்கம் எடுக்கும் உதவிகளைச் சட்டப் போராட்டம் மூலம் முடக்குவது குறித்து நீதிமன்றம் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.

“>

 

ஏழை எளிய மக்களின் வாழ்வாதார விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய இந்தக் கேள்விகள் தற்போது சட்ட மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.