
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் பேச முடியாத அல்லது கேட்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இரண்டு குழுக்களாக பிரிந்து பேசுவார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குவதால் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானது. இந்த நிலையில் பெண் நண்பர்கள் மீது அதிக அக்கறை காட்டும் ஆண் நண்பர்கள், அதனை எரிச்சலாக பார்க்கும் பெண்கள் என இரண்டு தரப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். அதில் என்னுடைய தோழி பேருந்து நிலையம் சென்றால் அவளோடு நானும் செல்வேன்.
ஏனென்றால் அவளின் பாதுகாப்பு மிக அவசியம். பேருந்தில் அவள் பக்கத்தில் எந்த ஆணும் உட்கார கூடாது. அவர்கள் என்னுடைய தோழியின் மேல் கை வைத்து விடுவார்கள் என்று ஆண் நண்பர் ஒருவர் கூற, இதன் பிறகு கடுப்பான கோபிநாத் இதுபோல நீங்களும் ஒரு ஆண் தானே. அப்போது எப்படி பெண்ணின் அப்பா உங்களுடன் அனுப்புகிறார் என்று கேட்க அதற்கு நம்பிக்கை என்று கூறினார். உங்கள் மீது கொண்ட நம்பிக்கை மட்டும் அல்ல அவர் பெண்ணின் மீதும் கொண்ட நம்பிக்கை தான் என்று தரமான பதிலடி கொடுத்துள்ளார் கோபிநாத். இதை பார்க்கும் பொழுது ஆண்களை விட தங்களுடைய பாதுகாப்பில் பெண்களுக்கு தான் அதிகமான முக்கியத்துவம் இருக்கிறது என்பது தெளிவாகிறது. இந்த செய்தியை பார்த்த பிறகு இளைஞர்களின் இது போன்ற காரியங்களில் ஈடுபட மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.