பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டபோது அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக ஒரு நாட்டின் ராணுவ தளபதிக்கு வழங்கப்படும் விஐபி அந்தஸ்து எதுவும் இன்றி, ஒரு சாதாரண நபரைப் போலவே அவர் நடத்தப்பட்டது பாகிஸ்தான் தரப்பிற்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

​அந்த வைரல் வீடியோவில், பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு பெண் அதிகாரி, ஆசிம் முனீரைத் தடுத்து நிறுத்தி, “நில்லுங்கள், உங்கள் ஐடி கார்டு எங்கே? அதைத் திருப்பி அடையாளம் காட்டுங்கள்” என்று மிகவும் சாதாரணமாகக் கேட்பது பதிவாகியுள்ளது. தனது நாட்டில் சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் ஆசிம் முனீர், அங்கே ஒரு சாதாரண ஊழியரைப் போல அமைதியாக நின்று தனது அடையாள அட்டையைக் காட்டியது பலரையும் கேலி செய்ய வைத்துள்ளது.

“பாகிஸ்தான் ராணுவத் தலைமைக்கு சர்வதேச அளவில் இருக்கும் மரியாதை இவ்வளவுதான்” என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்தச் சம்பவத்தைக் கிண்டல் செய்து வருகின்றனர்.