துனிசியாவில் சிறிய நகரம் ஒன்று இருக்கிறது. இதற்கு மட்மதா என்ற பெயர். தெற்கு துனிசியாவில் டிஜெபில் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள இந்த நிலப்பரப்பில் இந்த நகரமானது அமைந்திருக்கிறது. பண்டைய காலங்களில் போர் சமயத்தில் மறைந்திருப்பதற்காக ராஜதந்திரிகள் மற்றும் ராஜாக்கள், சாதாரண மக்கள் போன்றவர்கள் பதுங்கு குழிகள், ரகசிய அறைகள் சுரங்கப்பாதைகள், நிலத்தடி அறைகளை பயன்படுத்தினார்கள் என வரலாற்று புத்தகங்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால் தென் ஆப்பிரிக்கா நகரமே நிலத்திற்குள் தான் இருக்கிறது.

இந்த நிலத்தடி நகரமானது டிஜெபெல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது. ஸ்டார் வார்ஸ் படப்பிடிப்பு இந்தோனேசியாவில் மட்மதா நகரத்தில் தான் செய்யப்பட்டது. இப்போது இந்த பாரம்பரிய கட்டமைப்புகள் கொண்ட நகரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறி வருகிறார்கள். வெப்பத்தில் வாழ முடியாத காரணத்தால் இங்கு உள்ள நிலத்தின் அடியில் மண்ணைத் தோண்டி வாழ்ந்து வந்தார்கள். எளிய கை கருவிகளோடு தோண்டக்கூடிய அளவுக்கு மென்மையாக இருக்கும் மனக்கற்களில் முதலில் ஆழமான வட்டக் குழியை தோண்டி வீடுகளை கட்டுகிறார்கள்.

சுற்றி தோண்டப்பட்டு நிலத்தடி அறைகளை உருவாக்கி வீட்டின் அமைப்பை கொண்டு வருகிறார்கள். இந்த தனித்துவமான கட்டுமானமானது பகலில் வெப்பத்திலிருந்து தப்பிக்க உதவுகிறது. 1960 இல் பெய்த கனமழையால் இந்த குடியிருப்புகள் கொஞ்சம் சேதமடைந்துள்ளது. இருப்பினும் தற்போது இந்த வீடுகள் அனைத்தும் நவீன வசதிகளோடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.