ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026-ன் இறுதிப் போட்டியில், வரும் மார்ச் 8-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
வான்கேடே மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி உற்சாகத்தில் உள்ள இந்திய அணி, இந்த மெகா பைனலுக்காக தனது ‘பிளேயிங் 11’-ல் அதிரடி மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, ஃபார்ம் அவுட்டில் உள்ள தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக ‘பினிஷர்’ ரிங்கு சிங்கைச் சேர்த்துக் கொண்டு, சஞ்சு சாம்சன் – இஷான் கிஷன் ஜோடியைத் தொடக்க வீரர்களாகக் களமிறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அகமதாபாத் மைதானத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, வருண் சக்ரவர்த்திக்குப் பதிலாக அனுபவமிக்க பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணி இந்தியாவிற்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தாலும், சமீபகாலமாக இந்திய அணி அவர்களுக்குப் பதிலடி கொடுத்து வருவதால், இந்த இறுதிப் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
