கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அங்கு 706 பேர் பாதிக்கப்பட்டோருடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் அதிக தொடர்பில் உள்ளவர்களாக அச்சுறுத்தலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸால் அங்கு ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்துள்ளனர். உ தொடர்ந்து, கோழிக்கோடு மாவட்டத்தில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ள 7 கிராமங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நிபா தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவாமல் இருக்க, கேரளாவில் ஆன்லைன் வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் கொரோனாவை விட ஆபத்தானது, இது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது.