பாகிஸ்தான் நாட்டில் நேற்று முன்தினம் அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் இளம் பெண் ஒருவர் சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் அந்த பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது.

அதாவது அந்தப் பெண் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர். அவருக்கு 28 வயது ஆகிறது. அவர் சமீபத்தில் பாகிஸ்தான் வந்துள்ளார். இதைத்தொடர்ந்து 5 நாட்களாக ஒரு கும்பல் அந்தப் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதைக் கேட்டு காவல்துறையினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் தமீசுதீன் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் சுதந்திர தின விழாவின் போது வெளிநாட்டு பெண் ஒருவருக்கு கொடூர சம்பவம் அரங்கேறியது அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.