பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்களது எதிப்பை தெரிவித்து இருந்தனர். ஏனெனில் பட்ஜெட் 2024 ல் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக மற்ற மாநிலங்களுக்கு அங்கீகாரக் கொடுக்கப்படவில்லை என இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

இதனை தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது. அவரை தொடர்ந்து கர்நாடக, கேரளா , தெலுங்கானா, இமாசலபிரதேசம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்

இந்நிலையில் தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்..  அதில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு சிறப்பு திட்டத்தையும் அரசு அறிவிக்கவில்லை, மேலும் மதுரை எய்ம்ஸ் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டை மாற்றான் தாய் மனப்போக்குடன் மத்திய பாஜக அரசு நடந்து கொள்கிறது என்று முதல்வர் விளக்கம் அளித்தார்.

மேலும் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்காக 1.ரூபாய் கூட ஒதுக்கவில்லை , அத்துடன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஒரு இடத்தில் கூட தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை .. திருவள்ளுவர் கூட கசந்துவிட்டார் மத்திய பாஜக அரசிற்கு என்று அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து பேசினார் .. “பாஜக அரசியல் நோக்கத்திற்காக மட்டும் ஆட்சி நடத்துவதாக”. குற்றம் சாட்டினார் தொடர்ந்து இவ்வாறு தவறுகள் செய்தால் , மேலும் பல தோல்விகளை சந்திப்பீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.