அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்று கிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் (UAP) தொடர்பான ரகசியக் கோப்புகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்தில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “ஏலியன்கள் இருப்பது உண்மைதான்” என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தது உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில், ஒபாமாவின் இக்கருத்தை விமர்சித்த ட்ரம்ப், அவர் ரகசியத் தகவல்களை வெளியிட்டுப் பெரிய தவறு செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியதுடன், அந்த மர்மங்களை முழுமையாக வெளிச்சத்திற்குக் கொண்டு வரத் தாம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்காகப் பென்டகன் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு முகமைகளுக்கு உத்தரவிட்டுள்ள அவர், UFO தொடர்பான அனைத்துத் தரவுகளையும் அடையாளம் கண்டு வெளியிடும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார்.