
விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ‘நா ரெடி தான் வரவா’ என்ற பாடலுக்கு ஷிகர் தவான் ரீல்ஸ் செய்துள்ள வீடியோ வைரலாகியுள்ளது..
பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் சமீப காலமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, பயணம் செய்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். சமீபத்தில் இவர் தமிழ் பாடலுக்காக வெளியிட்ட ரீல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் தொடர்ந்து பதிவிடுகிறார், அடிக்கடி பல்வேறு பாடல்களைப் பயன்படுத்தி ரீல்கள் மற்றும் இடுகைகளைப் பகிர்ந்து கொள்கிறார். சமீபத்தில், ட்ரெண்டிங்கில் இருக்கும் விஜயின் லியோ படத்தின் பாடலுக்கான ஆடியோ ரீலைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் அதிரடி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள லியோ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதன் நா ரெடி தான் வரவா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் குவித்து வருகிறது.
வைரலாகும் ஷிகர் தவான் :
இதே பாடலுக்கு பல்வேறு சமூக வலைதள பிரபலங்களும் நடனமாடி ட்ரெண்டாகி வருகின்றனர். இந்நிலையில் ஷிகர் தவானும் அதே பாடலுக்கு நடனமாடி ரீலை பகிர்ந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் பகிர்ந்த வீடியோவை இதுவரை 3 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர், மேலும் இந்த இடுகை 500K லைக்குகளுக்கும் மேல் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட கருத்துகளைப் பெற்றுள்ளது.
தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி :
இதைப் பார்த்து தமிழ் ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியடைந்து அண்ணா நீ எங்க ஆளுன்னா, சாமி நம்ம பாஷைபேசுதே, அண்ணா சிஎஸ்கே வாங்க அண்ணா என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். குறிப்பாக பல தளபதி விஜய் ரசிகர்கள் இந்த ரீல்களை ஷேர் செய்து இணையத்தில் ஷிகர் தவானை ட்ரெண்ட் செய்கின்றனர்..
Shikhar Dhawan dancing in the #NaaReady song of "Leo" Movie.pic.twitter.com/gsauad01dh
— Johns. (@CricCrazyJohns) July 24, 2023