இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் பொதுவான நடுவர்களை நியமிக்க முடிவு செய்ய வேண்டும் என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா வலியுறுத்தியுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி டிரா ஆனது. கோப்பை 1-1 என இரு அணிகளுக்கும் இடையே பகிரப்பட்டது. கடந்த போட்டியில் இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத்துக்கு கொடுக்கப்பட்டஅவுட், மைதானத்தில் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய விதம் மற்றும் போட்டிக்கு பிந்தைய விருது வழங்கும் விழாவில் அவரது நடத்தை ஆகியவையும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“சில போட்டிகளில் இப்படித்தான் நடக்கும். அது நமக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. அதுவும் இந்த தொடரில் டிஆர்எஸ் இல்லை. நடுவர்கள் சில முடிவுகளை எடுக்கும்போது அது சிறப்பான முறையில் இருக்க வேண்டும். சில முடிவுகளுக்கு இரண்டாவது சிந்தனை அவசியம் தேவை. ஆனால் அது எந்த சிந்தனையும் இல்லாமல் கொடுக்கப்பட்ட அவுட்.

ஐசிசி, பிசிசிஐ மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஆகியவை இவ்விவகாரம் குறித்து ஆலோசித்து இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டியதாக உள்ளது.. அது நல்ல முடிவாக இருக்கும்  என்று நம்புகிறேன்.மைதானத்தில் நடந்தது ஆட்டத்தின் ஒரு பகுதி. இது முன்னரும் இப்படி நடந்துள்ளது. இந்தியாவுக்காக விளையாடும்போது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு உள்ளது. அது நடக்கும் போது, ​​இது போன்ற ஒன்று நடக்கும். ஹர்மன்பிரீத்தை நான் நன்கு அறிவேன். சற்று வேகத்தில் அப்படி செய்ததாக ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார்.