இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்கள் பிறந்த குழந்தைக்கு கூட இப்போதிலிருந்தே சேமிக்க விரும்புகின்றனர். அவ்வாறு சேமிக்க நினைக்கும் மக்களுக்காக தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் licயின் கன்யாதன் பாலிசி பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது.

இந்த பாலிசியில் நாள் ஒன்றுக்கு 151 ரூபாய் வீதம் மாதத்திற்கு 4,530 டெபாசிட் செய்தால் 25 ஆண்டுகள் முடிவில் 31 லட்சம் ரூபாய் கிடைக்கும். பாலிசியில் இணைய விரும்புபவர் குறைந்தபட்சம் 30 வயது உடையவராகவும் குழந்தைக்கு ஒரு வயதும் இருக்க வேண்டும். 22 ஆண்டுகளுக்கு சந்தாதாரர் பிரீமியம் செலுத்த வேண்டும். மீதமுள்ள மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் கட்ட வேண்டிய அவசியமில்லை. இந்தத் திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இப்போது இணைந்து பயன் பெறுங்கள்.