இந்தியாவில் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மூலமாக மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு எரிவாயு சிலிண்டர்களுக்கு தொடர்ந்து மானியம் பெற வேண்டும் என்றால் இதற்கு KYC செய்ய வேண்டும். KYC செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அவ்வாறு செய்யாவிட்டால் மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு மானியம் நிறுத்தப்படும். KYC இரண்டு வழிகளில் செய்யப்படலாம். அதாவது கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று KYC அப்டேட்டை முடிக்கலாம். ஆன்லைன் மூலமாக செய்ய இதோ எளிய வழி,

இதற்கு முதலில் https://www.mylpg.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று முகப்பு பக்கத்தில் எச்பி இந்தியன், பாரத் கேஸ் கம்பெனி எரிவாயு சிலிண்டரின் புகைப்படங்கள் இருக்கும்.

அதில் உங்களுடைய எரிவாயு நிறுவனத்தின் சிலிண்டர் படத்தை கிளிக் செய்த உடன் KYC விருப்பம் காட்டும்.

அதனை கிளிக் செய்த பிறகு ஆதார் சரிபார்ப்பு கேட்கப்படும். ஓடிபி வந்த பிறகு புதிய பக்கம் திறக்கும்போது அதில் கேட்கும் விவரங்களை உள்ளிட வேண்டும். இறுதியாக கேஒய்சி புதுப்பிப்பு செயல்முறை முடிந்து விடும்.