அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களது வளர்ப்பு நாய்களைப் பொதுப் பயன்பாட்டு இடங்களான லிஃப்ட் போன்ற குறுகிய பகுதிகளுக்கு அழைத்து வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சமூக வலைதளங்களில் தற்சமயம் ஒரு பெரும் விவாதமே வெடுத்துள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் லிஃப்ட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவருடன் வந்துள்ளார்.
அதே லிஃப்ட்டில் மற்றொரு பெண் தனது வளர்ப்பு நாயை எவ்வித பாதுகாப்புப் பட்டையும் இன்றி அழைத்து வந்துள்ளார். இதைக் கண்டு பயந்த அந்த கர்ப்பிணிப் பெண்ணின் கணவர், “என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார், இந்த நாய் கடித்துவிட்டால் ஆபத்தாகிவிடும்.. எனவே நாயின் முகத்தில் பாதுகாப்புப் பட்டையைக் கட்டுங்கள்” என்று மிகவும் நியாயமான முறையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், அதனைக் காது கொடுத்துக் கேட்காத அந்த நாய் உரிமையாளரான பெண், “என் நாய் யாரையும் கடிக்காது.. நீங்கள் தேவையின்றி சண்டை இழுக்கிறீர்கள்” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே லிஃப்ட்டிற்குள்ளேயே கடுமையான வாக்குவாதமும் சச்சரவும் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ தற்சமயம் இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
एक महिला कुत्ते को लेकर अपार्टमेंट की लिफ्ट में पहुंच गई
उसी लिफ्ट में एक गर्भवती महिला और उसका पति भी था
उस महिला से उस गर्भवती महिला के पति ने कहा-
आप अपने कुत्ते के चेहरे पर पट्टी लगा लेक्योंकि मेरी पत्नी गर्भवती है इसको कुत्ता काट सकता है।
उस औरत ने कहा – मेरा कुत्ता… pic.twitter.com/uKGWdmEyQm
— 𝗠𝗮𝗿𝗶𝘆𝗮𝗺_𝗠𝗕𝗗 (@Mariyam_MBD) July 17, 2026
“>
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுப் பாதைகள் மற்றும் லிஃப்ட்களைப் பயன்படுத்தும்போது, மற்றவர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சத்தைக் கருத்தில் கொண்டு வளர்ப்பு விலங்குகளுக்கு முறையான பாதுகாப்புப் பட்டைகளை அணிவிக்க வேண்டியது அவசியமாகும். இருப்பினும், அதனைப் புறக்கணித்து கர்ப்பிணிப் பெண்ணின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
