உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய பெண்கள் அணி  ‘கலா சஷ்மா’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது..  

தென்னாபிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த முதல் 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. ஷெபாலி வர்மா தலைமையில் விளையாடும் இந்திய அணி பந்துவீச்சு, பீல்டிங், அதன்பின் பேட்டிங் என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டது. 68 ரன்களுக்கு இங்கிலாந்து அணியை இந்திய பெண்கள் அணி ஆல் அவுட் செய்தது. இதையடுத்து எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் உலக கோப்பையை கைப்பற்றியது. ஐசிசி போட்டியில் இந்திய பெண்கள் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றனர்.

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, இந்திய மகளிர் வீராங்கனைகள் அதை கோலாகலமாக கொண்டாடினர். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய மகளிர் வீராங்கனைகள் ‘கலா சஷ்மா’ பாடலுக்கு நடனமாடினர்., ஐசிசி தனது சமூக ஊடகங்களில் இந்திய பெண் வீராங்கனைகளின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில் இந்திய பெண் வீராங்கனை ஆடுவது போல் உள்ளது. வீரர்களின் இந்த புதிய ஸ்டைலைக் கண்டு ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ், இந்தியா தனது முதல் டி 20 உலகக் கோப்பையை வென்றது மற்றும் ஷஃபாலி வர்மாவின் தலைமையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியும் ஞாயிற்றுக்கிழமை அதையே செய்தது. இந்த பெரிய வெற்றிக்குப் பிறகு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியை பார்ப்பதற்கு அழைப்பு விடுத்தார் மற்றும் அணிக்கு ரூ 5 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார்.