சூர்யகுமார் யாதவ் தனது சக வீரர் வாஷிங்டன் சுந்தரிடம் மன்னிப்பு கேட்டார்..

லக்னோவில் நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், நியூசிலாந்தின் 99 ரன்களைத் துரத்துவதில் இந்திய அணி திணறியதால், இந்த வெற்றி அவ்வளவு எளிதானது அல்ல. காரணம் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருந்ததால் இரு அணிகளுமே தடுமாறியது. இப்போட்டியில் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லையென்றால் பாருங்களேன், பிட்ச் எவ்வளவு கடினம் என்று. எப்படியோ ஒரு பந்து எஞ்சிய நிலையில் இந்தியா வென்றது. 20வது ஓவரின் 5வது பந்தில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியை தந்தார் சூர்ய குமார் யாதவ். 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்த சூர்யா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும், வலது கை பேட்ஸ்மேன் தனது சக வீரர் வாஷிங்டன் சுந்தரிடம் மன்னிப்பு கேட்டார். 32 வயதான சூர்யகுமார் யாதவ் கூறியதை மேலும் கூறுவோம். அதாவது, 4வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். ஆனால் அப்போதுதான் ஒரு பெரிய சம்பவம் நடந்தது. உண்மையில், 15வது ஓவரில், க்ளென் பிலிப்ஸை சூர்யகுமார் யாதவ் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றார்.

பந்து பேடில் பட்டு ஆஃப் பக்கம் நோக்கிச் சென்றது. பந்துவீச்சாளர்கள் எல்பிடபிள்யூக்கு வலுவான முறையீடு செய்தனர். இந்த நேரத்தில், சூர்யா ரன் ஓடத் தொடங்கினார், ஆனால் வாஷிங்டன் சுந்தர் வேண்டாம் என கைகாட்டினார். சூர்யா கிட்டத்தட்ட அவர் அருகில் நின்றார். இரு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தவறுதலின் பலன் கிவி அணிக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. 9 பந்தில் 10 ரன்கள் எடுத்திருந்த வாஷிங்டன் சுந்தர் தனது மூத்த வீரருக்காக விக்கெட்டை தியாகம் செய்தார்.

இதுகுறித்து பேசிய சூர்யா, ‘பேட் செய்ய சென்றபோது நிலைமை சுலபமாக இல்லை.. ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்த பிறகு, பேட்ஸ்மேன் ஆடுகளத்தில் இருக்க வேண்டியிருந்தது. வாஷி அவுட் ஆன விதம் என் தவறுதான் என்று கூறினார். சீனியர் வீரமான சூர்யகுமார் யாதவ் வாஷிங்டன் சுந்தரிடம் மன்னிப்பு கேட்டது ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளது..

அதேபோல ரன்அவுட் குறித்து சுந்தர் கூறியதாவது, எந்த விதமான வருத்தமும் இல்லை. சூர்யகுமார் யாதவ் இறுதிவரை இருப்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது. சில நேரங்களில் விளையாட்டுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். இந்த வகையான தவறான புரிதல் அடிக்கடி நிகழ்கிறது, குறிப்பாக இடையில் விஷயங்கள் கடினமாக இருக்கும்போது. கடைசி வரை சூர்யா இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் என்று கூறினார்..