வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தமிழகத்திற்கு என்று கொடுக்கவில்லை. எல்லாத்தையும் அப்படியே முடக்கி விட்டார்கள். நாம் செய்யக்கூடிய வேலைக்கு பட்ஜெட்டில் பணம் இல்லை என்று காரணம் காட்டுகிறார்கள்.

இந்தியை படிங்கடா என்றால் போராட்டம் பண்ணுகிறீர்கள், கோவிலை கட்டுங்க என்றால் பள்ளிக்கூடமாக கட்டுகிறீர்கள், எனவே பணம் இல்லை என்று மத்திய அரசு சின்ன சின்ன விஷயத்திற்காக எல்லாம் தமிழகத்தை காரணம் காட்டி தொடர்ந்து வஞ்சிக்கிறது. இந்த ஆண்டு அதிகமான பணம் சந்திரபாபு நாயுடுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை எங்கள் பணத்தை கூட ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். பிறக்கும் பிள்ளைக்கு தான் பெயர் வைப்பார்கள், ஆனால் நம்முடைய ஊரில் வரும் புயலுக்கு எல்லாம் பெயர் வைத்து விடுகிறார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லை. நாம் வயிற்று பசிக்கு சோறு கேட்கிறோம், அவங்க நானே கடன்காரனா இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால் அம்பானி மற்றும் அதானி 25 லட்சம் கோடி கொடுக்கணும் அதனை தள்ளுபடி செய்கிறார்கள். உங்களுடைய மாநிலத்தில் படித்தவர்கள் அதிகம் , எல்லோருமே நன்றாகத்தான் இருக்கிறார்கள், முன்னேறிய மாநிலமாக தமிழக இருப்பதால் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படி செய்வது கொஞ்சம் கூட சரியில்லை என்று மத்திய அரசை துரைமுருகன் விமர்சித்துள்ளார்.