
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் அதன் பிறகு 2019-க்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.
ஆனால் கடந்த முறை இந்திய தேர்தல் ஆணையத்தில் சீமான் விண்ணப்பிக்க தாமதமாகிவிட்டதால் விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இதனால் மைக் சின்னத்தில் அவர்கள் போட்டியிட்டார்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மாநில கட்சி அந்தஸ்தை பெற்ற நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. மேலும் இது நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.