ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், நாட்டின் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு இந்திய தம்பதியும் குறைந்தபட்சம் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் அறிவுரை வழங்கியிருந்தார். அவரது இந்த கருத்து பல்வேறு தரப்பினரிடையே விமர்சனத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “எல்லாவற்றிலும் கட்டுப்பாடு கொண்டு வர முடியாது. நான் விரும்பினால் ஆறு குழந்தை கூட பெற்றுக்கொள்வேன். இனி இருவருக்கா, அறுவருக்கா? என எங்களுக்கு விதிமுறைகள் போட முடியாது. நாங்கள் என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு பிள்ளை பெற வேண்டும் என்று நீங்கள் சொல்லக்கூடாது” என்று கடுமையாக சாடியுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

“>