அதிமுக கட்சியின் ஜெயக்குமார் தற்போது உதயநிதிக்கு சவால் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வாரிசு அரசியலையும் குடும்ப ஆட்சியையும் தலைமையிடமாகக் கொண்டுள்ள திமுகவின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தற்போது ஏதேதோ பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடியாரை பார்த்து குறைத்தால் தனக்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அந்த விஷக் கொடுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் உளறித்திரியும் அந்த உதவா நிதிக்கு நாவடக்கம் தேவை. 57 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சி நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க நான் ரெடியாக இருக்கிறேன்.

என்னுடன் விவாதிக்க ரெடியா என்று உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் நேற்று எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டு என்னுடன் நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என்று உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். அதோடு விவாதம் நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் போன்றவற்றை அந்த விஷக்கொடுக்கே தேர்வு செய்யட்டும் என்று கூறியுள்ளார்.