முன்பு திமுக ஆட்சி இருந்த காலத்தில், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு மாணவர்களிடம் நற்பண்புகள் மற்றும் நல்ல விஷயங்களைப் பேசுவதற்காக அண்ணாமலை சென்றுள்ளார். அவர் அங்குப் பேசிவிட்டு வந்த அடுத்த ஒரு வாரத்திற்கு, அந்த நெஞ்சழுத்த அரசியல் பழிவாங்கலாக, திமுகவினர் அந்தக் கல்லூரியின் மின்சாரத்தை முற்றிலுமாகத் துண்டித்துள்ளனர் என்ற அதிர்ச்சிப் பின்னணியைப் பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை உடைத்துள்ளார். ஒரு அரசியல் தலைவர் வந்து பேசியதற்காக, கல்வி கற்கும் ஒரு கல்லூரியின் கரண்ட்டை ஒரு வாரம் கட் செய்த திமுக ஆட்சிக் காலத்து ஆணவ அரசியல் சதி தற்போது ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிரவைத்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அக்கல்லூரியினுடைய தாளாளர் செய்வதறியாது பதறிப்போய் அண்ணாமலைக்கு போன் செய்தபோது, “ஆணவத்தோடு அரசியல் செய்த அந்த அமைச்சரைப் பார்த்து ஒரு சாரி (மன்னிப்பு) கேட்டு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள், இந்த மண் அவர்களைச் சும்மா விடாது” என்று அண்ணாமலை அவருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன் சாட்சியாகவும், அந்தப் பாவத்தின் சம்பளமாகவும்தான் 2026 தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு எதிராக அமைந்தன என்று சுட்டிக்காட்டிய அண்ணாமலை, தங்களது ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு வரும் 2031ஆம் ஆண்டு தேர்தலில் நேர்மையான, ஒரு மாற்று அரசியலாகத் தமிழக மக்கள் முன்னிலையில் கம்பீரமாக வந்து நிற்கும் எனப் பொள்ளாச்சி மாநாட்டு மேடையில் அதிரடியாகப் பேசியுள்ளார்.
