இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகும் நிலையில் அதிலும் சில வீடியோக்கள் மிகவும் டிரெண்டாகி விடுகிறது. அதிலும் விலங்குகள் பற்றிய வீடியோ என்றால் சொல்லவே வேண்டாம். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் நடந்து செல்லும் போது அவரின் எதிரே மூன்று ஆடுகள் கடந்து செல்கிறது.

முதலில் ஆடுகள் அமைதியாக சென்ற போதிலும் திடீரென ஒரு ஆடு மட்டும் அவரின் பின்னால் சென்று அவரை முட்டி கீழே தள்ளிவிட்டது. அவர் அமைதியாக சென்ற போதிலும் அந்த ஆடு மீண்டும் திரும்பி சென்று அவரை முட்டி தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடியது.

அந்த நபர் எழுந்து அந்த ஆடுகளை நோக்கி நடந்து சென்றார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.