தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருக்கும் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்துக்கு திருப்தி அளிக்காததால் அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்தது. இது உண்மைதான் என்று நிரூபிக்கும் விதமாக விக்னேஷ் சிவனும் தன்னுடைய வலைதள பக்கத்தில் அஜித் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பதிவை நீக்கி இருந்தார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பலரும் அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக வந்த தகவல்களில் எந்த உண்மையையும் இருக்காது. அது வெறும் வதந்தியாக தான் இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.