முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர், அதிமுகவில் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். “நான் என்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயம் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில்தான் எனது அரசியல் பயணத்தைத் தொடர்கிறேன்” என்று மிக உருக்கமாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது தொகுதி மக்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே அடுத்தகட்ட முடிவை அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

​இன்று மாலை முதல் விராலிமலை தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்க்கும் தனது இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அதிமுக உட்கட்சி அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில், சி.விஜயபாஸ்கரின் இந்தத் திடீர் அறிவிப்பு மற்றும் தொகுதி மக்களைச் சந்திக்கும் திட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.