தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசினார். அப்போது ஆளுநர் அடைத்த தேநீர் விருந்தில் நானும் முதல்வரும் கலந்து கொண்ட போது ஆளுநர் என்னோட வயது பற்றி கேட்க முதல்வர், துரை என் அப்பாவோடு 53 ஆண்டுகாலம் இருந்தவர். இப்போது என்னோடு இருக்கிறார். உதயா ஓடும் இருக்கிறார் என்றார். அதற்கு நான், உதயாவுக்கு ஒரு பையன் இருக்கான் அவனோடவும் நான் இருப்பேன் என்றேன் என துரைமுருகன் பேசினார்.

மேலும் தொடர்ந்து பேசிய துரைமுருகன், திமுகவில் நீண்ட காலமாக இருந்து விட்டேன். துறையை ஏற்று பேரவையில் பேசிய போது முதல்வர் உட்பட அனைவருமே என்னை வாழ்த்தினார்கள். நான் மறைந்த பிறகு கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதுங்கள் என உருக்கமாக பேசினார். இந்த பேச்சு ஒட்டு மொத்த அவையையும் நெகிழ வைத்தது.