
தமிழக அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் நிதி தர முடியும் என்று மத்திய பாஜக அரசு கூறியுள்ளது. ஆனால் தமிழக அரசு இரு மொழிக் கொள்கையை மட்டும் தான் என்றென்றும் பின்பற்றுவோம் என்றும் ஹிந்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
ஆனால் பாஜகவினர் தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை பின்பற்றுவதாகவும் அரசு பள்ளிகளில் மட்டும்தான் இரு மொழி கல்விக் கொள்கையை பின்பற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள நிலையில் கண்டிப்பாக மும்மொழி கல்வி கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக பாஜக மற்றும் திமுகவினர் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பாஜக கட்சியின் நிர்வாகி அலிஷா அப்துல்லா உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்டு ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
எங்கள் வீட்டில் நாங்கள் பயன்படுத்தும் மொழி உருது.நான் ஆங்கில வழி கல்வியில் தான் படித்தேன்.என்னுடைய RACEING துறையில் சிறந்து விளங்கிய இஸ்லாமிய பெண் என்பதால்.நான் பாஜகவில் இணைந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் புரிதல் இல்லாமல் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவில் இணைந்தேன்.நான் பாஜகவில் இணைந்த ஒரே காரணத்திற்காக திமுக ஊடகங்கள் என்னை போட்டி போட்டுக் கொண்டு நேர்காணல் எடுத்தனர்.
அதன் சூழ்ச்சியும் திமுகவின் அரசியலும் எனக்கு அப்போது தெரியவில்லை.என்னை பாஜகவில் இருந்து வெளியேற்ற திமுக சார்பில் இருந்து என்னுடைய தொழில் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.ஒரு படி மேல் சென்று நீங்கள் திமுகவில் இணையுங்கள் உங்களுக்கு பெரிய பொறுப்பு கொடுக்கிறோம் என்றும் கூறினார்கள். எனக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்னவென்றால் நான் ஒரு இஸ்லாமிய பெண்.
இஸ்லாமியர்களுடைய வாக்கு ஒன்று கூட பாஜக பக்கம் போக கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறார்கள். நான் மறுபடியும் சொல்கிறேன் நான் தமிழ் பாரம்பரிய குடும்பம் கிடையாது தமிழகத்தில் பிறந்து உருது மொழியை பேசும் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள். பாரம்பரிய தமிழ் குடும்பத்தை சேர்ந்த உதயநிதிக்கு ஒரு சவால். இன்று என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும்.திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ? என்று பதிவிட்டுள்ளார்.
எங்கள் வீட்டில் நாங்கள் பயன்படுத்தும் மொழி உருது.நான் ஆங்கில வழி கல்வியில் தான் படித்தேன்.என்னுடைய RACEING துறையில் சிறந்து விளங்கிய இஸ்லாமிய பெண் என்பதால்.நான் பாஜகவில் இணைந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அரசியல் புரிதல் இல்லாமல் நல்லது செய்ய வேண்டும் என்ற… https://t.co/SF2zVu4lTl
— Dr. Alisha Abdullah (@alishaabdullah) February 21, 2025