நான்தான் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தேன் என்பதை மறந்து விட்டனர் என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பேசிய அவர், இந்திய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்த போதே எல்லோரும் என்னை விமர்சித்தார்கள்.

தற்போது ரோஹித் தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பை வென்றதும் அனைவரும் விமர்சிப்பதை நிறுத்தி விட்டார்கள். மேலும் நான் தான் ரோகித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதை அனைவரும் தற்போது மறந்துவிட்டார்கள் என சவுரவ் கங்குலி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.