திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு அவசர கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் வருகிற 18-ஆம் தேதி பாமணி, கோட்டகம், விளக்குடிகிச்சன், ஆலத்தம்பாடி போன்ற நான்கு இடங்களில் சாலை மறியல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன், எம்.எல்.ஏ மாரிமுத்து ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் போன்றோர் முன்னிலை வகித்தனர்.