நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரியார் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு கண்டனங்கள் என்பது குவிந்து வருகிறது. அதாவது சீமான் பாலியல் இச்சை வரும்போது தாய் மகளாக இருந்தாலும் சரி சகோதரியாக இருந்தாலும் சரி அவர்களுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று பெரியார் சொன்னதாக கூறினார். அதோடு சமூக நீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தமில்லை எனவும் மது குடிக்காதே என்று சொல்வதும் கட்டிய மனைவியுடன் படுக்காத என்று சொல்வதும் சமம் என்று சொன்னவர் பெரியார் என்றும் அவர் பேசியது எல்லாம் பெண்ணுரிமையா என்றும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்தார்.

இதற்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, நாம் தமிழர் கட்சி கரைந்து கொண்டிருக்கும் இயக்கமாக மாறி உள்ளது. சீமான் எதையாவது பேசினால் தான் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்காக பேசுகிறார். வாழ்ந்து மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது நல்லதல்ல. கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது தான் சரியானதாக இருக்கும். மேலும் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தினால் தான் தன் பெயரை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்காக சீமான் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று கூறினார்.