உத்திரப்பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் கணவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முச்கான் ரஸ்தோகி தற்போது கர்ப்பமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இன்டியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மீரட் மாவட்ட சிறையில் உள்ள முஸ்கானுக்கு கடந்த வாரம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது, அதில் கர்ப்பம் உறுதியாகியுள்ளதாக மாவட்ட மருத்துவ அலுவலர் அசோக் கடாரியா உறுதிப்படுத்தியுள்ளார்.

முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலர் சாஹில் ஷுக்லா, கடந்த மார்ச் 4ஆம் தேதி சௌரப் ராஜ்புத் என்பவரை குத்திக்கொன்று, அவரது உடலை 15 துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் நிரப்பிய ட்ரம்மில் மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இருவரும் தற்போது மீரட் மாவட்ட சிறையில் தனித்தனி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியபோது, கைது செய்யப்பட்டதிலிருந்து முதன்முறையாக ஒருவரையொருவர் காண நேர்ந்தது. வீடியோ கான்பரன்ஸ் வழியாக காதலரை பார்த்த போது முஸ்கான் அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் முஸ்கான்  முஸ்கான் மெர்சன்ட் நேவி அதிகாரியான சௌரப் ராஜ்புத்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் போதைக்கு அடிமையான முஸ்கான் சாகில் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில் இந்த விவகாரம் அவருடைய கணவருக்கு தெரிய வந்ததால் தன் காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்து உடம்பிலிருந்து தலையை தனியாக வெட்டினார். பின்னர் உடம்பை 15 துண்டுகளாக கூறு போட்டு சிமெண்ட் பூசிய டிரம்பில் பதுக்கி வைத்தனர். மேலும் கடந்த மாதம் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் சிறையில் தங்களுக்கு போதைப்பொருள் வேண்டும் என்று கேட்டு அடம்பிடிப்பதோடு ஒரே சிறையில் கிடைக்க வேண்டும் என்று முஸ்கான் அட்டூழியம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.